வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட செயலராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் முறைகேடுகள் உள்ள நிலையில் அவை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாட்டை வழங்கினார்
தற்போது வடக்கு மாகாண ஆளுநராக செயற்பட்டுவரும் நாகலிங்கள் வேதநாயகன் கடந்த 2015 மார்ச் முதல் 2020 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக செயல்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பிலே குறித்த விசாரணையை மேற்கொள்ளுமாறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன
குறித்த முறைப்பாட்டில்
யாழ் மாவட்ட செயலாளராக கடமையாற்றியி காலப்பகுதியில் நிதிமுறைகேடுகளிலும், மோசடிகளிலும் ஈடுபட்டதன் மூலம் பல மில்லியன்கள் அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைக்கான சமர்ப்பிக்கின்றோம்.
கணக்காய்வு ஆதாரங்களை தங்களின் விசாரணை மூலமாக ஆணைக்குழுவுக்கு நா.வேதநாயகன் அவர்களின் பொறுப்பின் கீழ் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பால் விநியோகத்திற்கான வலையமைப்பினை வலுவூட்டுதலும், பாலின் பெறுமதியினை அதிகரித்தலும் – யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் – திருநெல்வேலி. என்னும் வேலைத்திட்டத்தின் போது 6 மில்லியனுக்கும் அதிகமான பணம் துஸ்பிரயோகம் செயற்படுத்தப்பட்டுள்ளமை 07.07.2020 ம் திகதிய JF/A/QUE/KAC/VI/03/2020 ம் இலக்கம் கொண்ட அறிக்கை மூலம் யாழ்.மாவட்ட செயலகத்தின் பிரதான உள்ளக கணக்காய்வாளர் க.கமலரூபன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி கிடைக்காத அங்கீகாரத்துக்கு நிலையிலேயே நடைமுறைப்படுதப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கப்பட்டு செயற்திட்டங்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவினால் கோரப்பட்ட விபரங்கள் இன்றி மோசடி செய்யும் நோக்கில் உரிய தேவைப்பாட்டுக்கான இயந்திரம் கொள்வனவு செய்யப்படாமல், தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்யும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மோசடியான கொள்வனவு இடம்பெற்றுள்ளது.
உரிய பெறுகை நடைமுறைகளை கடைப்பிடிக்காமையும், உரிய தேவைக்கு பயன்படுத்தப்பட முடியாத இயந்திர சாதனங்களின் கொள்வனவும் லஞ்சம் மற்றும் மோசடி செயற்பாடுகளுக்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட வேண்டிய கட்டட நிர்மாணம் மேற்கொள்ளப்படாத நிலையில், கட்டட நிர்மாணத்தின் பின்னர் பொருத்தப்படவேண்டிய பல மில்லியன்கள் பெறுமதியான இயந்திரங்களை முன்னரே கொள்வனவு செய்து அவ் இயந்திரங்கள் பழுதடையக் கூடிய வகையில் பராமரிப்பற்ற இடங்களில் வைத்து வீணடிக்கப்பட்டமையானது மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2016 ஆம் மேற்கொள்ளப்பட்ட சுன்னாகம், சாவகச்சேரி, கப்புது ஆகிய பிரதேசங்களில் மலக்கழிவு மீள்சுழற்சி திட்டத்தை செயற்படுத்தல் என்னும் வேலைத்திட்டத்தின் போது பல மில்லியன்கள் நிதி துஸ்பிரயோகம் செயற்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
செயற்றிட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், கருத்திட்ட சாத்தியக்கூற்று அறிக்கை மற்றும் கருத்திட்டத்துடன் தொடர்புடைய ஏனைய வேலைகளுக்கு தேவையான ஒதுக்கீட்டு உறுதிப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
சுற்றுச்சுழல் அதிகார சபையின் அனுமதி பெறப்படாமல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெறுகைக்குழு உறுப்பினர்களில் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திணைக்களத் தலைவர்/அவரது பிரதிநிதி உறுப்பினராக உள்ளடக்கப்படவில்லை.
ஒப்பந்தகாரரால் 2016.11.24 ம் திகதி 14.5 மில்லியன் mobilization advance கோரி சமர்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு 2016.12.02 ம் திகதி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதிக்கொடுப்பனவான 9,529,204.15 ரூபா 2016.12.22 ம் திகதி கோரப்பட்டிருந்த நிலையில், அளவீட்டு தாள் இன்றியும், பகுதிக் கொடுப்பனவுகள் குறித்த ஒப்பந்த நிபந்தனையின்றியும், குறித்த துறையில் பொறியியலாளர்களினால் கொடுப்பனவு பட்டியல்கள் செவ்வை பார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படாமலும் மூன்று நாட்களுக்குள் மிக அவசரமாக கொடுப்பனவுகள் நிதிப்பிரமாணங்களுக்கு முரணான வழங்கப்பட்டமை மோசடி நிறைந்ததாகும். பெற்ற
2016.12.28 ம் திகதி 3 வது பகுதி கொடுப்பனவுக்கான கொடுப்பனவு சிட்டை ரூபா 29,886,679.06 சமர்ப்பிக்கப்பட்டு சிபார்சு செய்யப்பட்டு 2016.12.31 ம் திகதிக்குள் கொடுப்பனவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கொடுப்பனவினை 2016.12.31 ம் திகதி செலவினமாக காட்டப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதே குறித்த கொடுப்பனவை 3 பிரிவுகளாக பிரித்து வழங்கலாம் என மாவட்டச் செயலாளரான நா.வேதநாயகனால் அனுமதிக்கப்பட்டமை நிதி நடைமுறைக்கு முரணானதும், முறைகேடானதுமான நடவடிக்கையாகும்.
ரூபா 12,205,266,93 தொகையானது மாவட்ட செயலக பொது வைப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வாக்குத் தலைப்பிற்கு செலவினமாகக் காட்டப்பட்ட செலவினங்களை திறைசேரியின் அனுமதியின்றி வைப்புக் கணக்கிற்கு மாற்றியமை நிதி பிரமாணங்களுக்கு முரணானதும் மோசடி நிறைந்த செயற்பாடுமாகும்.
viii. ஒப்பந்த வேலை முத்திரைகளோ பொறிக்கப்படும் திணைக்கள நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாதமை மூலம் ஆவண மோசடிகளின் ஊடான நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன.
மேற்குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் அரச நிதி முறைகேடுகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டவரும் தற்போது வடக்கு மாகாண கௌரவ ஆளுநராக செயற்படுவருமான திரு.நாகலிங்கம் வேதநாயகனின் ஊழல், மோசடிகள் தொடர்பில் விரைவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




