Home புதினங்களின் சங்கமம் அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் இலங்கையின் முன்னாள் கிறிகட் அணி தலைவர் சங்ககாராவுக்கு நேர்ந்த அநீதி!

அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் இலங்கையின் முன்னாள் கிறிகட் அணி தலைவர் சங்ககாராவுக்கு நேர்ந்த அநீதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் ரயான் எயார் விமான நிறுவன ஊழியர்கள் பா குபாடான முறையிலும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டப்ளின் விமான நிலையத்திலிருந்து பிரிஸ்டல் நோக்கிப் பயணிக்கத் தயாரானபோது, ரயான் எயார் நிறுவனத்தின் விமான நுழைவாயில் ஊழியர்களின் அணுகுமுறை, அச்சுறுத்தும் தொனி மற்றும் தவறான நடைமுறைகள் அதிர்ச்சியளிப்பதாகச் சங்கக்கார தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “உங்களைப் போன்ற கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் இத்தகைய நடத்தையைத்தான் எதிர்பார்க்க வேண்டும்” என்று ஊழியர்கள் கூறியதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தெளிவான இ னவாத நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள ரயான் எயார் நிறுவனம், கட்டாயக் குடிவரவு ஆவணப் பரிசோதனையின்போது சங்கக்கார ஆரம்பத்தில் தேவையான விசா ஆவணங்களைச் சமர்ப்பிக்க மறுத்ததாகக் கூறியுள்ளது.

எனினும், ஆவணப் பரிசோதனைகள் நிறைவடைந்து அவரது பயணத் தகுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, கடந்த 28ஆம் திகதி திட்டமிட்டபடி அவர் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும், சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு விளையாட்டு வீரருக்கு நேர்ந்த இந்த அனுபவம் குறித்துக் விளையாட்டு உலகின் பல பிரபலங்களும் ரசிகர்களும் ரயான் எயார் நிறுவனத்தின் அணுகுமுறைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களும், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments