Home புதினங்களின் சங்கமம் பெற்றோரே அவதானம்! 14 வயது அண்ணணும் 12 வயது தங்கச்சியும் போதைப் பொருளுக்கு அடிமை என...

பெற்றோரே அவதானம்! 14 வயது அண்ணணும் 12 வயது தங்கச்சியும் போதைப் பொருளுக்கு அடிமை என கைது! நீதிமன்றில் நிறுத்தப்பட போது அதிர்ச்சியடைந்த நீதிபதி!

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவர்களான அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவரையும் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் யார் என்பது குறித்து ஆராய்ந்து, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்புப் பிராந்திய நல்வழிப்படுத்தல் (பரிசோதனை) அதிகாரிக்கு மாளிகாகந்த நீதிவான் ஜனீதா ரோஷனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டு நல்வழிப்படுத்தல் காவலில் வைக்கப்பட்டிருந்த 14 மற்றும் 12 வயதுடைய சிறுவர்களான அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முன்வைக்கப்பட்டக் கருத்துகளை ஆராய்ந்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நல்வழிப்படுத்தல் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த 14 மற்றும் 12 வயதுடைய சிறுவர்களான அண்ணன் – தங்கை இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறுவர்கள் இருவரும் பாடசாலைக்குச் செல்வதில்லை எனக் காவல்துறைக்குக் கிடைத்த முறைப்பாடொன்றின் அடிப்படையில், மாதம்பிட்டிய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, 14 மற்றும் 12 வயதுடைய சிறுவர்களான அண்ணன் – தங்கை இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவர்களிடமிருந்து 220 மில்லிகிராம் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இவ்விரு சிறுவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்பின்னர், சிறுவர்கள் இருவரும் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அண்ணன் – தங்கை இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துச் சிறுவர்கள் இருவரும் நல்வழிப்படுத்தல் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குழந்தைகளின் தாயாரும் நெருங்கிய உறவினர்கள் சிலரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கொழும்புப் பிராந்திய நல்வழிப்படுத்தல் அதிகாரி கத்ஷிலா மெத்தானந்தா, சிறுவர்கள் இருவர் தொடர்பில் தயாரிக்கப்பட்ட நல்வழிப்படுத்தல் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, “சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச் சிறந்த குடும்பச் சூழலில் இந்தச் சிறுவர்கள் வளர்ந்துள்ளனர். குழந்தைகளின் தந்தை ஒரு நல்ல தொழிலைப் புரிந்தவர்” என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அவ்வாறிருந்தும், இக்குடும்பத்தின் மூத்த மகள் தனது 16 ஆவது வயதில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், பின்னர் அம்மகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் நல்வழிப்படுத்தல் அதிகாரி தெரிவித்தார். இதனால் மனமுடைந்த தந்தையும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார் எனக் குறிப்பிட்ட அதிகாரி கத்ஷிலா மெத்தானந்தா, இடைப்பட்ட காலத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டொன்றில் தந்தை சிறைவாசம் அனுபவித்துள்ளார் என்றும், அந்தக் காலப்பகுதியில் வீட்டிலிருந்து தப்பியோடிய மூத்த மகள், போதைப்பொருளுக்கு அடிமையான தனது கணவனுடன் மீண்டும் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார் என்றும் கூறினார்.

போதைப்பொருள் சம்பவத்தால் சிறைவாசம் அனுபவித்த தந்தை விடுதலையாகி வீட்டிற்கு வந்ததும், அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த தனது மூத்த மகளையும் அவளது கணவனையும் வீட்டிலிருந்து விரட்டியடித்துள்ளார் என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய நல்வழிப்படுத்தல் அதிகாரி கத்ஷிலா மெத்தானந்தா, இதனால் கோபமடைந்த சிறுவர்களின் அக்கா, இச்சிறுவர்களையும் போதைப்பொருளுக்குப் பழக்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.

சிறுவர்கள் இருவருக்காக ஆஜரான சட்டத்தரணி கருத்துத் தெரிவிக்கையில், “குழந்தைகளின் நெருங்கிய உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமையால், குழந்தைகளின் பொறுப்பினை அவர்களிடம் ஒப்படையுங்கள்” கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் ஆராய்ந்த நீதிவான், சிறுவர்கள் இருவரின் பொறுப்பு மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக பத்தரமுல்லை சிறுவர் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மாதம்பிட்டிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

சிறுவர்கள் இருவரையும் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் யார் என்பது குறித்து ஆராய்ந்து, பத்தரமுல்லை சிறுவர் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நல்வழிப்படுத்தல் அதிகாரிக்கும், குறிப்பிட்ட தினத்தில் சிறுவர்கள் இருவரையும் சிறுவர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமெனச் சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் உத்தரவிட்ட நீதிவான், அதுவரை சிறுவர்கள் இருவரையும் நல்வழிப்படுத்தல் காவலில் வைக்குமாறு பணித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments