Home புதினங்களின் சங்கமம் மன்னார் – மடு பிரதான வீதியில் கோர விபத்து: லக்சிகா பலி, மூவர் படுகாயம்!

மன்னார் – மடு பிரதான வீதியில் கோர விபத்து: லக்சிகா பலி, மூவர் படுகாயம்!

மன்னார் – மடுப் பிரதான வீதியில் இன்று (18.10.2026) அதிகாலை நடந்த வாகன விபத்தில் 55 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியிலிருந்து நால்வர் காரில் மடுத் தேவாலயத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை சுமார்-05.45 மணியளவில் தேவாலயத்துக்குச் சில கிலோமீற்றர் முன்னதாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளது.விபத்தில் காயமடைந்த நால்வரும் பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 55 வயதான சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ என்ற பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விபத்துக்கான உண்மையான காரணம் தொடர்பில் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments