யாழ் கல்வியங்காட்டில் இராசபாதை வீதி மற்றும் டச்சு வீதி சந்திக்கும் மூலையில் கலாநிதி அ.அருட்செல்வம் என்ற பெயர்ப் பலகையில் சமாதான நீதவான் பட்டமும் இடப்பட்டு பொருத்தப்பட்ட சட்டவிரோத கட்டம் ஒன்றை பலரும் கண்டிருக்கலாம். 55 வயது மதிக்கத்தக்க குறித்த அருட்செல்வம் சுவிஸ்நாட்டில் இருந்து வந்தவன். 8ம் வகுப்புவரையுமே படித்துள்ளான். இவன் கலாநிதிப்பட்டம் எங்கு பெற்றான்… சமாதான நீதவான் பதவியை எப்படி பெற்றான் என்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். இவன் குறித்த பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவன் அல்ல. வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் எனபதுடன் குறித்த காணியை வாங்கி அங்கு தனியே வந்து குடியேறினான் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.இவனுக்கு மனைவி, பிள்ளைகள் சுவிஸ் நாட்டில் இருக்கின்றார்களா என்பது கூடத் தெரியாது என அயலவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் இவன் தனது கட்டடத்தில் ஒரு சிறிய உணவகம் ஒன்றை நடாத்தி வந்தான். அந்த உணவகத்தில் 3 மாதத்திற்கு ஒரு பொம்பிளைப்பிள்ளை என கிட்டத்தட்ட 6 இற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்துள்ளார்கள். குறித்த பெண்கள் இவனுடன் இரவில் அந்த கட்டடத்திலேயே தங்கி வந்துள்ளார்கள். அப் பெண்கள் அனைவரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அயலவர்கள் கூறுகின்றார்கள்.
இவனது காணி உள்ள பகுதி நல்லுார் பிரதேசசபைக்கு சொந்தமானதாகும். இவன் கட்டிய கட்டடம் நல்லுார் பிரதேசசபையின் எந்தவித அனுமதியும் இன்றி சிறிய ஒரு பெட்டிக் கடைத் தொகுதிபோலவே கட்டப்பட்டது. அத்துடன் பனை மரங்கள், சிலாகைகள், தீராந்திகளையும் இவன் இங்கு விற்று வந்தான். அதன் பின்னர் இவன் ஓரிரு வருடங்களுக்கு முன் வீதி ஒழுங்கு முறைகளை மீறி ஒரு மேல்மாடியைக் கட்டியுள்ளான். இவன் குறித்த மேல் மாடியை சனி, ஞாயிறு தினங்களிலேயே கட்டி வந்தான். இவனது சட்டவிரோத கட்டடம் தொடர்பாக நல்லுார் பிரதேசசபைக்கு, இவனது கடைக்கு அருகில் உள்ள சாராய மொத்தவியாபாரி தொடங்கி பலரும் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் நல்லுார் பிரதேசசபை எடுக்கவில்லை.
நல்லுார் பிரதேசசபையில் கடமையாற்றிய தொழில்நுட்பவியலாளரான தயாளன் மற்றும் சுகாதாரத் தொழிலாளியின் பதவியில் இருந்து கொண்டு மேற்பார்வையாளராக கடமையாற்றி வந்த ஐயர் சிவசங்கர் மற்றும் ஒரு பிரதேசசபை உத்தியோகத்தர் ஆகியோருக்கு இவன் ஏராளமான லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் இதனால் நல்லுார் பிரதேசசபை குறித்த கட்டடம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காது விட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டடம் தொடர்பாக நல்லுார் பிரதேசசபையின் செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோருக்கு முழுமையான தகவல்களும் தெரிந்தும் அவர்கள் மௌமாக இருப்பது குறித்த கட்டட ஊழலில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என சந்தேகம் வருவதாகவும் தெரியவருகின்றது.
இவனது கட்டத்தில் இருந்து 200 மீற்றர் துாரத்திலேயே கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்தது. குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெருமளவான பொலிசார் இவனுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள். இரவில் கூட இவனுடன் சீட்டாட்டம் ஆடுவதுடன் இவனுடன் சேர்ந்து குடித்து கும்மாளமடித்து அங்கேயே படுத்தெழும்பி வந்தார்கள். சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிசாரிடம் மாட்டுப்பட்டவர்கள் அதிலிருந்து வெளியேறுவதற்காக இவனையே நாடி வருவார்கள். அவர்களிடம் இவன் பேரம் பேசி குறிப்பிடத்தக அளவு காசு கறந்த பின்னர் பொலிசாரிடமிருந்து அவர்களை விடுவித்து வந்துள்ளான். தனது கட்டடத்தை தனியார் பொலிஸ் நிலையம் போலவே நடாத்தி வந்தான். சிலர் தமது பிணக்குகளை தீர்ப்பதற்கு இவனிடமே வந்து முறையிட்டதாகவும் இவனே சில பிணக்குகளை தீர்த்து வைத்து வந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவனுடன் தங்கியிருந்து சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்து வந்த ஒவ்வொரு பெண்ணும் அங்கு வந்து இரவில் தங்கும் பொலிசாருடன் நிச்சயம் தொடர்பில் இருந்திருப்பார்கள் என அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கோப்பாய் பொலிசார் தமது இருப்பிடத்தை விட்டு அகன்று இராணுவ முகாம் பகுதிக்கு வெளியேறிச் சென்ற பின்னரும் பல பொலிசார் இவனது கட்டத்திலேயே இரவில் தங்கி வந்துள்ளார்கள்.
குறித்த கட்டடத்தில் சூதாட்டம் மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்கள் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரின் ஆதரவும் நடைபெற்று வந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது அருட்செல்வம் வெளிநாட்டில் இருந்து பதிவு செய்யப்படாது இறக்கப்பட்ட அதிநவீன மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றத்திற்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளான். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 உயர் திறன் மோட்டார் சைக்கிள்கள் இவனிடமிருந்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரின் விசேட சோதனை நடவடிக்கையின்போது குறித்த மோட்டார் சைக்கிள்கள் இவனது கட்டத்தில் இருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்களில் நான்கிற்கு எவ்விதப் பதிவுகளும் இல்லாததுடன், ஏனைய மூன்றிற்கும் போலியான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இவன் மேற்கொண்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் பொலிஸ் அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவனது கட்டடத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் KI-0777 எனும் இலக்கமுள்ள கார் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புட்டது எனவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பாவிக்கப்பட்டு வந்தது எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.







