Home புதினங்களின் சங்கமம் சவுதி அரேபியாவில் புனித தளமான மக்காவில் வைத்து உடல் உறவு கொண்ட கள்ளக் காதல் ஜோடிக்கு...

சவுதி அரேபியாவில் புனித தளமான மக்காவில் வைத்து உடல் உறவு கொண்ட கள்ளக் காதல் ஜோடிக்கு மரணதண்டனை!

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மெக்காவில் உறவில் ஈடுபட்டதாக வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் என்ற ஆணும், சிதி அக்தர் என்ற பெண்ணும் சவுதி அரேபியாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இருவரும் மெக்காவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலமான மசூதியில் உறவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதையடுத்து இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ஷரியத் சட்டப்படி இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக கோர்ட்டு உத்தவிட்டது. இதனை தொடர்ந்து நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிதி அக்தர் ஆகிய இருவருக்கும் நேற்று முன் தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

புனிதத் தலங்களின் கண்ணியத்தையும் வழிபாட்டுச் சட்டங்களையும் மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments