மாத்தறை – கொட்டிவில காவல்துறை நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) செயற்படும் பிரதான காவல்துறை ஆய்வாளர் வருணி போகஹவத்தவுக்குச் சொந்தமான சிற்றூர்தி ஒன்றை, காவல்துறை நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் பத்து பில்லியனுக்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரொருவரால் இந்த வாகனத்திற்கான லீசிங் தவணைக்கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், நடைபெற்றுவரும் விசாரணைக்காகவே இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, வாகனத்தை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நிதிக்கான மூலத்தைக் குறித்து பிரதான காவல்துறை ஆய்வாளர் வருணி போகஹவத்த வழங்கத் தவறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறை நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





