Home புதினங்களின் சங்கமம் 5 கொலைக் குற்றச்சாட்டுக்கள்! பிள்ளையானும் கூட்டாளிகளும் தொடர்ந்து சிறைக்குள்!

5 கொலைக் குற்றச்சாட்டுக்கள்! பிள்ளையானும் கூட்டாளிகளும் தொடர்ந்து சிறைக்குள்!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் ஒக்டோபர் 27 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி இன்று செவ்வாய்க்கிழமை (13) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.

2008 ம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தனர்.

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில்; உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (13) திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை ஆஜர்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் ஆஜர்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ள ‘பொலிஸ் பாய்ஸ்’ என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments