Home புதினங்களின் சங்கமம் புலம்பெயர் தமிழ் யுவதிக்கு நடந்த கொடுமை! அவதானம் மக்களே!

புலம்பெயர் தமிழ் யுவதிக்கு நடந்த கொடுமை! அவதானம் மக்களே!

பிரித்தானியாவில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து புதிய வகை மோசடியில் சிக்கிய பல ஈழத் தமிழர்கள் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை இழந்துள்ளனர்.

லண்டன் மற்றும் குரோய்டன் உள்ளிட்ட பகுதிகளில் போலிப் போலீஸார் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, வீடுகளில் உள்ள தங்க நகைகளைத் திருடர்களிடமிருந்து பாதுகாத்து தருவதாக கூறி ஏமாற்றும் புதிய மோசடி அதிகரித்துள்ளது. குறிப்பாக லண்டன் ஹேமர்ஸ்மித் போலீஸ் நிலையம் அதிகாரிகள் போல் நடித்து இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஏமாந்த ஈழத்தமிழ் பெண் ஒருவர் பெருந்தொகை நகையை இழந்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் பகிர்ந்துகொண்ட திடுக்கிடும் தகவலின்படி, மோசடி நபர்கள் போலீஸார் பெயரில் அழைத்து, உங்கள் வீட்டை அண்மித்த பகுதியில் திருடன் கைது செய்யப்பட்டுள்ளோம், அவரிடம் உங்களைப் பற்றிய தகவல்களும், உங்கள் வீட்டின் படங்களும் உள்ளன, உங்கள் வங்கி கணக்குகளும் ஆபத்தில் உள்ளன எனக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைப்பதற்காக 999 அவசர எண்ணிற்கு அழைத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள் என கூறி ஏமாற்று வேலை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் 999 எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர் அந்த போலி அதிகாரியை உண்மையான போலீஸ் சென்று உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு சூட்சுமமான முறையில் வீடுகளின் தொலைபேசி அழைப்புகளை மோசடியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு அழைப்பு எடுத்தாலும் அது மோசடியாளர்களின் இலக்கத்திற்கு செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதனால் முழுமையாக அச்சமடைந்த ஈழத்தமிழ் பெண் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியில் உறைந்து போய் கேட்டுக்கொண்டிருந்தார். திருடர்கள் வெளியில் உங்களைப் தாக்கக்கூடும் அதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி பயமுறுத்திய கும்பல், வீட்டில் மதிப்புமிக்க நகைகள் உள்ளதா என கேட்டு தெரிந்து கொண்டுள்ளது.

மேலும் ஒரு ரகசிய பாஸ்கோட் கூறி போலீஸ் அதிகாரி போல் முகமூடி அணிந்து வந்த நபரிடம் அந்த நகைகளை ஒப்படைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனை நம்பி பாதிக்கப்பட்டவர்களும் தங்களது விலைமதிப்பற்ற தங்க நகைகளையும் பணத்தையும் அந்த திருட்டு கும்பலிடம் பறி கொடுத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் குறிப்பாக ஆசிய நாட்டவர்களை குறிவைத்து இத்தகைய குற்றங்கள் நடந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments