Home புதினங்களின் சங்கமம் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்தை இழக்கும் ஈழத்தமிழன்! நடந்தது என்ன?

7 கோடி ரூபா பெறுமதியான சொத்தை இழக்கும் ஈழத்தமிழன்! நடந்தது என்ன?

கனடாவில் சொத்துக்களை வாங்கும்போது தமிழ் மக்கள் சிலர் காட்டும் கவனயீனம், பல லட்சம் டாலர்களை இழந்து பெரும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சொந்தமாக வீடுகளை கொள்வனவு செய்த பலர், தற்போது மாதாந்த அடமான தவணை கட்டணங்களை செலுத்த முடியாமல், தங்களின் தங்க நகைகளை அடகு வைத்து தவணை கட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஆன நெருக்கடியான நிலையில், ஈழத்தமிழர் ஒருவர் கனடாவில் வீடு வாங்க முயன்று, தற்போது பல லட்சம் டாலர்களை நஷ்டஈடாக செலுத்த வேண்டிய கடுமையான சட்ட நெருக்கடியில் சிக்கியுள்ளார். 2021-ஆம் ஆண்டு இவர் சுமார் 10 மில்லியன் கனேடிய டாலர் மதிப்பில் புதிதாக கட்டப்பட இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை முன்ப பதிவு செய்து, ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை முன்பணமாக செலுத்தினார்.

2024-ஆம் ஆண்டு குறித்த வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு முடிக்கப்பட்டு ஒப்படைக்கும் நேரம் வந்தபோது, சந்தை வீழ்ச்சி காரணமாக அதன் மதிப்பு 10 லட்சத்திலிருந்து 8 லட்சம் டாலராக குறைந்திருந்தது. இதனால் மனமுடைந்த அவர், அந்த வீட்டை வாங்கும் முடிவை மாற்றி அதிலிருந்து விலகி உள்ளார். முன்பணமாக செலுத்திய தொகையை கைவிட்டுள்ளார். வீட்டை உடனடியாக கையகப்படுத்தி ஒப்பந்தத்தை முடிக்குமாறும், தவறினால் ஏற்படும் நிதி இழப்புகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கட்டப்பட்ட மேம்பாட்டாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் அந்த அறிவிப்பை புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீட்டு விவகாரம் தொடர்பாக சட்ட சிக்கலில் குறித்த ஈழத்தமிழர் சிக்கியுள்ளார். வீட்டினை விற்பனை செய்த முகவர் நிறுவனம் சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே செலுத்திய முன்பணம் கழித்து, சுமார் 3.7 லட்சம் டாலர்கள் இழப்பீடாக செலுத்தமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடா ரியல் எஸ்டேட் சட்டங்களின்படி ஒப்பந்தம் செய்த பிறகு சந்தை மதிப்பு குறைந்தாலும், டெவலப்பர்கள் தங்களின் நஷ்டத்தை சகித்துக்கொள்ள மாட்டார்கள். வீட்டை வாங்க ஒப்புக்கொண்ட நபரே அந்த இழப்பீட்டை சட்டபூர்வமாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

ப்ரீ கன்ஸ்ட்ரக்ஷன் வீடுகளை வாங்கும் முன் எதிர்கால வட்டி விகிதங்கள் மற்றும் சந்தை மாற்றங்களை கவனித்து எச்சரிக்கையாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். மேம்பாட்டாளர்களிடமிருந்து வரும் சட்ட அறிவிப்புகளையோ அல்லது குறிப்புகளையோ ஒருபோதும் அலட்சியப்படுத்தி நிராகரிக்கக் கூடாது. ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் ஆரம்பத்திலேயே தகுதியான ரியல் எஸ்டேட் வல்லுநர்களை அணுகி ஆலோசனை பெறுவது இது போன்ற பல லட்சம் டாலர் இழப்புகளை தவிர்க்க உதவும். கனடாவில் வசிக்கும் நமது ஈழத்தமிழ மக்கள் சொத்துக்களை கொள்வனவு செய்யும்போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments