இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.
வாழ்வின் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் தவறான முடிவுகள் எதற்கும் ஒரு போதும் தீர்வாகாது,
சாதாரண தரத்தில் (O/L) 9A சித்திகளைப் பெற்று திறமையை வெளிப்படுத்த இமையாணணை பிறப்பிடமாக கொண்ட “சுரேந்திரன் கலையார்வன்” என்ற Uduppiddy AMC மாணவன் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வாணவனாக பல்கலைக்கழகத்திற்குச் சென்று பல சாதனைகளைப் படைப்பார் என்று அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக தவறான முடிவொன்றை எடுத்து இறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் தருகிறது.
நம் சமூகத்தில் உள்ள ஒரு திறமையான இளைஞன் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. நம் வாழ்வில் என்னதான் கடுமையான பிரச்சினைகள், சவால்கள் மற்றும் மன அழுத்தங்கள் வந்தாலும், உயிர் இழப்பது என்பது எதற்கும் தீர்வாகாது.
இன்றைய பல இளைஞர்களிடம் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் பொறுமை குறைந்து வருவதையே இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறிது காலம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தால் கடந்து செல்லக்கூடிய பிரச்சினைகளுக்காக, தங்களின் விலைமதிப்பற்ற உயிரையும், பெற்றோரின் பெரிய கனவுகளையும் ஒரு நொடியில் இல்லாமல் ஆக்குவது எந்த விதத்திலும் நியாயமல்ல.
வாழ்க்கையில் கஷ்டங்களும் சவால்களும் வரும்போது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனவிட்டுப் பேசுங்கள், உதவி கேளுங்கள்,விளையாட்டில் ஈடுபடுங்கள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையை நாம் வளர்த்துக்கொள்ள முடியும் . இதுபோன்ற தவறான முடிவுகளை நமது சமூகத்தில் உள்ள இளைய சமுதாயம் இனிமேலாவது தவிர்க்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
இளம் வயதில் எம்மை விட்டுப் பிரிந்த தம்பி சுரேந்திரன் கலையார்வனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !ஓம் சாந்தி!





