Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் 11 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பெரியப்பாவுக்கு 25 வருட கடூழிய...

மட்டு’வில் 11 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பெரியப்பாவுக்கு 25 வருட கடூழிய சிறை!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 11 வயது சிறுமியைக் கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை
அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை
குறித்த குற்றவாளிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடும், 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சிறுமியைக் கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், தண்டனைச் சட்டக்கோவையின் 354 மற்றும் 364ஆம் பிரிவுகளின் கீழ் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியால் “பெரியப்பா” என அழைக்கப்பட்ட 37 வயதுடைய நபர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி அவர் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் கடந்த வெள்ளிக்கிழமை (09.10.2026) தண்டனைத் தீர்ப்பை அறிவித்தார்.

இதன்படி, சிறுமியைக் கவர்ந்து சென்றமைக்காக 10 ஆண்டுகளும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக 15 ஆண்டுகளுமாக மொத்தம் 25 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும், 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

நஷ்டஈட்டைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments