இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…….
தாயும், தந்தையும் தனது மகள் பாடசாலைக்கு போய் விட்டார் என்று நம்பிக் கொண்டிருக்க…
வகுப்பறை ஆசிரியர் அந்த மாணவி பாடசாலைக்கு வரவில்லை லீவு போல என்று எண்ணிக் கொண்டிருக்க…
ஆனால் அந்த 13 வயதேயான மாணவி வீட்டில் பாடசாலைக்கு செல்வதாக கூறி விட்டு இன்னும் ஒரு வீட்டில் ஜாலியாக….
(விசாரணையில் இது ஒரு முறையல்ல பல முறை.)
இன்னும் ஒரு பாடசாலையில் 3 மாணவிகள் பாடசாலையை விட்டும் யாருக்கும் தெரியாமல் வெளியேறி இளைஞர்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த போது ஒருவரிடம் கையும் களவுமாக பிடிபட்டு பாடசாலை ஆசிரியர்களுடம் ஒப்படைப்பு.
இன்னும் ஒரு பாடசாலையில் மாலை நேரம் பாடசாலை வந்த மாணவி ஒருவர் பீடிக்கட்டு, லைட்டருடன் வசமாக சிக்கிக் கொள்ளுதல்.
(விசாரணையில் வாப்பாட பீடி கட்டும், லைட்டருமாம்)
இந்த மாணவிகள் யாருமே உயர்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல Just 13 to 14 வயதுடைய மாணவிகள்.
அதாவது தரம் 8 – 9 வகுப்பு மாணவிகள்.
இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட ஒற்றுமை என்ன தெரியுமா…?
தந்தைமார் அன்பாக வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்ட் தொலைபேசி பாவிப்பவர்கள்.
இவர்களுடைய பெற்றோர்களுடம் சென்று பாடசாலை ஆசிரியர்கள் அல்லது வேறு யாரும் மகளைப் பற்றி முறைப்பாடு வழங்கினால்…
என்னுடைய மகள் குழந்தைப் பிள்ளை அவளுக்கு ஒன்றுமே தெரியாது, இது போலியான குற்றச்சாட்டு, அவள் முக்காடு கூட கழட்டுவது கிடையாது அவ்வளவு அடக்க ஒடுக்கமான பிள்ளை என்பார்களாம்.
பிள்ளைகள் மீது அவ்வளவு அதிகப்படியான நம்பிக்கை.
நான் ஒரு ஆசிரியரிடம் தந்தையிடம் மகளைப் பற்றி முறைப்பாடு செய்யாமல் android phone வாங்கிக் கொடுக்கும் போதே பாதுகாப்பு உறையின் பாவனை குறித்தும் மகளுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்லி ஆலோசனை வழங்குங்கள் என்றேன்.
ஒரு சில பாடசாலைகளில் மாணவி ஒருவர் பாடசாலைக்கு வரவில்லை என்றால் உடனடியாக வகுப்பு ஆசிரியரால் பெற்றோர்கள் அங்கம் வகிக்கின்ற WhatsApp group ல் அறிவிக்கப்பட்டு விடுகின்றது.
ஆனால் இந்த system அனைத்து பாடசாலைகளுலும் இல்லை.
ஒரு சில மாணவிகளின் வயதுக்கு மீறிய செயல்களால் பாடசாலைக்கும் அவப் பெயர் தான்.
பிள்ளையை பெத்து விட்டால் மட்டும் தந்தையாக முடியாது பிள்ளைகள் மீதும் அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டும்.
பெற்றோர்களின் அக்கறை என்பது பிள்ளைகள் படிக்க வேண்டிய வயதில் தொலைபேசி வாங்கிக் கொடுத்து கெடுப்பது அல்ல படிக்க வேண்டிய வயசில் .என்றும் நாம் உங்களுடன்.





