கனடாவின் டொராண்டோவில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 10,000 கனடிய டலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வெளிநாட்டு ஊழியர் திட்டத்தின் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிராம்ப்டன், கில்ஸின் வீதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், அரசாங்க ஆய்வின் போது கோரப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 28 அன்று எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம், அண்மையில் கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்டது.
அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், இந்த ஆலயத்தின் தகுதி நிலை இன்னமும் தகுதியுடையது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் திட்டத்தில் பங்கேற்க ஆலயத்திற்கு தடை விதிக்கப்படவில்லை.
கனடாவில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் விவரங்கள் வெளிப்படைத்தன்மைக்காகப் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.





