இலங்கையில் தற்போது சர்ச்சைக்குரிய நபராகவுள்ள ஞானசார தேரருக்கு பிரான்ஸில் மனைவியும் மகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுபலாசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் குறித்து மிகச் சர்ச்சைக்கரிய பல தகவல்களை ஜா-எல முன்னாள் நகரபிதா அஞ்சு பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.
ஜா-எல முன்னாள் நகரபிதா , நேர்காணலில் ஒன்றிலேயே ஞானசார தேரர் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். ஞானசார தேரருடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகியதாகக் கூறும் அஞ்சு பெரேரா, தேரருக்கு பிரான்ஸில் மனைவியும் ஒரு மகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“மனோஜா” எனப்படும் அந்தப் பெண் இலங்கை வந்தடைந்தது முதல், கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று அவரை அழைத்து வந்து தெஹிவளையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்குவதற்குக் தங்குமிட வசதி செய்து கொடுத்தது தாம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஞானசார தேரர் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள விடுதிகளுக்குச் செல்லும் போதுகூட, குடும்பத்தினருடன் ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஞானசார தேரர் துறவிக் காவி உடை அணிந்திருந்த போதிலும், ஒரு சாதாரண மனிதனை விடவும் கேவலமான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் நகரபிதா, அவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததுடன் மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்து, சாதாரண ஆடைகளை அணிந்து சுற்றித் திரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியிடம் கூட தேரர் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும், அந்தச் சம்பவத்திற்குப் பிறகே தாம் தேரரிடமிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, பொதுபலாசேனா அமைப்பின் செயல்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்பவே இயக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அளுத்கம மோதல் உட்பட மதக் கலவரங்களை உருவாக்குவதற்காக ராஜபக்ஷக்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகளும் வழிகாட்டல்களும் கிடைத்ததாக அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
பௌத்த சாசனத்தையும் பௌத்த துறவிகளின் கௌரவத்தையும் சீரழித்து, தேசிய இயக்கம் என்ற போர்வையில் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்ட இத்தகைய நபர்கள் உண்மையான துறவிகள் அல்லர் என்றும், இவருக்கு மிகவும் பொருத்தமானது சிறைச்சாடை உடடே என்றும் , தாம் வெளியிட்ட இந்த அறிக்கைகள் அனைத்திற்கும் முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் ஜா-எல முன்னாள் நகரபிதா அஞ்சு பெரேரா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது





