Home புதினங்களின் சங்கமம் யாழில் வாள்களுடன் பட்டப்பகலில வந்து பொதுமக்களை அச்சுறுத்திய காவாலிகள்! Npp கட்சி ஆதரவாளர்களாம்! பொலிசார்...

யாழில் வாள்களுடன் பட்டப்பகலில வந்து பொதுமக்களை அச்சுறுத்திய காவாலிகள்! Npp கட்சி ஆதரவாளர்களாம்! பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அந்த ஊரவர்களை மிரட்டுகின்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து இவ்வாறு வாளினை எடுத்து சென்று மிரட்டியுள்ளனர். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தும் பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வாளுடன் வந்த ஒரு இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பப் பெண் ஒருவரது விரலையும் வாளினால் வெட்டி துண்டாக்கியுள்ளார். மேலும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் NPP கட்சி ஆதரவாளர்கள் எனவும் குறித்த கட்சிக்காக தேர்தல் காலத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து திரிந்தவர்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments