Home புதினங்களின் சங்கமம் ஞானசார தேரரின் காவி ஆடைகள் களையப்பட்டு சிறை உடை அணியப்பட்டது!

ஞானசார தேரரின் காவி ஆடைகள் களையப்பட்டு சிறை உடை அணியப்பட்டது!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இன்று (05) பிற்பகல் கைதிகளுக்கான சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு, தற்போது சிறைச்சாலை சீருடையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஞானசார தேரர் சாதாரண கைதிகள் தங்க வைக்கப்படும் சிறை அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments