இந்திய கேப்டனின் துணிச்சலான நடவடிக்கையாலும், பயணிகள் மற்றும் பிற ஊழியர்களின் உதவியினாலும் விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சவூதியில் கைது செய்யப்பட்ட ஹம்மாமி, பின்னர் மேலதிக விசாரணைக்காக அமீரகத்திற்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையில், விமானத்தை விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டதாகவும், தனக்கு சாவுக்கு பயமில்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிரியா உள்நாட்டு போரின் போது அவர் தீவிரவாத பாதைக்கு மாறினாரா அல்லது இணையதளம் மூலம் தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டாரா என்பது குறித்து அமீரக மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றியபோது, தீவிரவாத இணையதளங்களைப் பார்த்ததற்காக அவர் பறக்கத் தடை செய்யப்பட்டு, மாற்றுப் பணிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
திடீரென நடிகையின் கன்னத்தை கிள்ளிய நபரால் ஷாக்!
திடீரென நடிகையின் கன்னத்தை கிள்ளிய நபரால் ஷாக்!
எனினும், உரியப் பின்னணிப் பரிசோதனைகள் இன்றி ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் அவர் மீண்டும் உதவி விமானியாக இணைந்தது எவ்வாறு என்பது குறித்துப் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.





