Home புதினங்களின் சங்கமம் பெற்றோரே அவதானம்!! யாழில் 16 வயது மாணவியின் காதல் வெறி!! காதலனான மாணவனின் வீட்டுக்குள் புகுந்து...

பெற்றோரே அவதானம்!! யாழில் 16 வயது மாணவியின் காதல் வெறி!! காதலனான மாணவனின் வீட்டுக்குள் புகுந்து ரகளை!!

யாழ்ப்பாணத்தில் 16 வயதான மாணவி ஒருவர், தனது காதலனான அதே வயதுடைய மாணவனின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நகரப் பகுதிக்கு சற்றுத் தொலைவில் உள்ள தனியார் பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி, தனது 16 வயதான காதலன் தன்னுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டதால், நல்லூர் பகுதியில் உள்ள அவனது வீட்டைத் தேடிச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தன்னை மூன்று வருடங்களாகக் காதலித்து வந்த மாணவன் தற்போது தன்னைவிட ஒரு வயது குறைந்த மற்றொரு மாணவியின் பின்னால் செல்வதாகக் கூறி, மாணவனின் பெற்றோரிடம் முறையிட்டு அழுது குளறியதுடன், வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து காதலனைத் தாக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாணவனின் பெற்றோர், உடனடியாக மாணவியை வீட்டுக்கு வெளியே அமைந்திருந்த குளியலறைக்குள் அழைத்துச் சென்று பூட்டிய பின்னர், மாணவியின் பெற்றோருடன் தொடர்புகொண்டு அவர்களை அங்கு வரவழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மாணவி குளியலறைக்குள் இருந்து கத்திக் குளறியதால், அயலவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்கள் அங்கு திரண்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் அங்கு வந்து, மாணவியைத் தூக்கி முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காதலனான மாணவன், யாழ். நகரப் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருபவர் எனவும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அப்பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் பெற்றோரும் மாணவனின் பெற்றோரும் அரச உத்தியோகத்தர்கள் எனவும், மாணவியின் தாயார் யாழ். நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியும் காதலனான மாணவனும் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் ஒன்றாகக் கல்வி கற்று வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த விடயம் கடந்த வருடமே இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவி குறித்த தனியார் கல்வி நிலையத்தில் இருந்து பெற்றோரால் இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

அதன் பின்னரும் மாணவி, மாணவனைத் தொலைபேசி மூலமாகவும் நண்பிகள் ஊடாகவும் தொடர்ச்சியாகத் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும், அதனை மாணவன் புறக்கணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், மாணவன் அதே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும், யாழ். நகரப் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றின் 15 வயதான மாணவி ஒருவருடன் நட்பாக இருப்பதாக மாணவியின் நண்பிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவி மாணவனின் வீட்டுக்குச் சென்று, அவனைத் தாக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த மாணவி தலைக்கவசம் அணியாமலும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் தனது தாயாரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றது தொடர்பாக மாணவனின் அயலவர்கள் மாணவியின் பெற்றோரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு, “அவர் வழக்கமாக இவ்வாறு தனது நண்பிகளிடம் செல்வதால், இவ்வாறு செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை” என மாணவியின் பெற்றோர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, மாணவனுடன் குறித்த மாணவி தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணுவதற்காக தனது தாயாரின் தொலைபேசியைப் பயன்படுத்தியதும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments