Home புதினங்களின் சங்கமம் லண்டனில் இருந்து இலங்கை சென்ற தமிழருக்கு வெள்ளவத்தையில் காத்திருந்த அதிர்ச்சி! அனைத்தையும் இழந்தது ஏன்?

லண்டனில் இருந்து இலங்கை சென்ற தமிழருக்கு வெள்ளவத்தையில் காத்திருந்த அதிர்ச்சி! அனைத்தையும் இழந்தது ஏன்?

புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பல ஈழத் தமிழர்கள், கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்த நிலையில், பின்னரே தமது சொந்த இடங்களுக்குச் செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், புலம்பெயர் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற ஈழத் தமிழர் ஒருவருக்கு வெள்ளவத்தையில் பெருமதிர்ச்சி காத்திருந்த நிலையில், சாரதி ஒருவரினால் அவரின் வழிகாட்டு வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது.

கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குறித்த புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர், தனது கடவுச்சீட்டு உட்பட முக்கிய ஆவணங்களுடன் பணப்பையை முச்சக்கர வண்டியில் தவறவிட்டுள்ளார்.

இதனைக் கண்டெடுத்த குறித்த முச்சக்கர வண்டி சாரதியான நந்தகுமார், உரியவரைத் தேடிச் சென்று பணம் மற்றும் ஆவணங்களைக் கையளித்துள்ளார்.

கொழும்பில் பயணி ஒருவர் தவறவிட்ட பணப்பையைக் கண்டெடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், அதிலிருந்த பணம், அடையாள அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எதனையும் எடுக்காமல் உரியவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

சம்பவதினத்தன்று வெள்ளவத்தை தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கு அருகில் தான் போக வேண்டிய இடத்தை அடைந்ததும், பயணி முச்சக்கர வண்டிக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, சாரதிக்கு நன்றி தெரிவித்தபடி அங்கிருந்து சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர், தனது சட்டைப்பையைப் பார்த்தபோதே, பணப்பை காணாமல் போயிருந்ததை அவர் உணர்ந்துள்ளார். கடவுச்சீட்டு உட்பட அனைத்தும் தொலைந்த நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுதொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸில் முறைப்பாடு செய்யத் தயாரானபோது, தவறவிட்ட ஆவணங்கள் மீண்டும் கிடைத்துள்ளன.

இந்நிலையில, சாரதியின் நேர்மையால் அனைத்தும் மீண்டும் கிடைத்தமையால், மகிழ்ச்சியடைந்த புலம்பெயர் தமிழர், சாரதிக்குப் பணப்பரிசு வழங்கி நன்றி கூறியுள்ளார். எனினும், அதனைப் பெற்றுக்கொள்ள குறித்த சாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments