Home புதினங்களின் சங்கமம் கனடாவில் பிரபல தமிழ் நகைக்கடை மீது துப்பாக்கிச்சூடு! எதற்காக? தமிழர்களுக் எங்கும் இந்த நிலையா?

கனடாவில் பிரபல தமிழ் நகைக்கடை மீது துப்பாக்கிச்சூடு! எதற்காக? தமிழர்களுக் எங்கும் இந்த நிலையா?

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள பிரபல தமிழர் நகைக் கடை மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்கம் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் சந்தியில் அமைந்துள்ள ‘ஜெயசாய்’ நகைக் கடையைக் குறிவைத்து இன்று அதிகாலை 2:24 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ பொலிஸார் நடத்திய முதற்கட்ட சோதனையில், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. இந்த தாக்குதலில் நகைக் கடையின் கண்ணாடி ஜன்னல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் கடையில் எவரும் இருக்கவில்லை என்பதும், இதனால் உயிர்ச்சேதங்களோ காயங்களோ தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மற்றும் அவர்கள் தப்பிய வாகனம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments