Home புதினங்களின் சங்கமம் புத்தளம் வீதி விபத்தில் இரு சிறுவர்கள் பலி! தாய் படுகாயம்!

புத்தளம் வீதி விபத்தில் இரு சிறுவர்கள் பலி! தாய் படுகாயம்!

புத்தளம், மாதம்பே – குளியாபிட்டிய வீதியில் உள்ள பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களது தாய் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள், தும்மலசூரிய வீரகொடியானே பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களே ஆவர். விபத்தில் காயமடைந்த தாய், தற்போது சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேகமாகச் சென்றுகொண்டிருந்த உந்துருளி வீதியை விட்டு விலகி மின்கம்பத்தின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments