Home புதினங்களின் சங்கமம் மின்னேரியா விடுதியில் மர்மமாக உயிரிழந்த வவுனியா ஆசிரியையும் இலக்கியவாதியுமான வனிதா ரீச்சரின் மறுபக்கம்!

மின்னேரியா விடுதியில் மர்மமாக உயிரிழந்த வவுனியா ஆசிரியையும் இலக்கியவாதியுமான வனிதா ரீச்சரின் மறுபக்கம்!

வவுனியாவைச் சேர்ந்த வனிதா எனும் ஆங்கில ஆசிரியை, தமிழ்த்தேசியம் மற்றும் கலை, இலக்கியங்கள், சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவராவார். இவளது நடத்தை தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் பல வழிகளாலும் எமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. இருப்பினும், குறித்த தகவல்களின்படி ரீச்சரால் அவரது கொள்கைகள், குறிக்கோள்களைக் கடைப்பிடிப்பவர்கள், அவரைப் பின் தொடர்பவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதையும் அவதானித்து, அவரது தனிமனித சுதந்திரத்தையும் தனிப்பட்ட செயற்பாட்டையும் சுட்டிக்காட்ட விரும்பாததாலும் நாம் அவற்றைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

பொலநறுவை, மின்னேரியாவில் கிரிடாலே (Giritale) வாவிக்கு அருகில் உள்ள ஒரு பாதுகாப்பற்ற விடுதி அறை ஒன்றிற்கு வெளியே, வனிதா ரீச்சர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவளது கைகள் இரண்டும் பிளேட்டால் அறுக்கப்பட்டிருந்ததாகவும், அவள் தங்கியிருந்த அறையில் கணினியில் டைப் செய்யப்பட்டு பிரிண்ட் செய்யப்பட்ட கடிதம் அவளது கையெழுத்துடன் காணப்பட்டதாகவும், அந்தக் கடித்தில் தனது மரணம் தொடர்பாகவும் தனது ஆடை நிறுவனம் தொடர்பாகவும் விவரங்கள் காணப்பட்டதாகவும், கைப்பேசி உடைந்த நிலையில் இருந்ததாகவும், அவளது கைப்பேசியில் நுவரேலியா பூண்டுலோயாவுக்குச் செல்லும் பேருந்து டிக்கெட் காணப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

அடர்காட்டுச் சூழலில் உள்ள குறித்த கிரிடாலே வாவிக்கு அருகிலேயே இராணுவப் பொலிஸ் பயிற்சி நிலையம் மற்றும் இராணுவப் புலனாய்வு கட்டமைப்பு போன்றவை இயங்குகின்றன. அங்குப் படையினரின் தேவைகளை நிறைவு செய்வதற்காக ‘ ஆயுர்வேதிக்’ எனும் மசாஜ் நிலையம் ஒன்றும் உள்ளது. இறுதி யுத்தத்தின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட பெண் புலிகள் மற்றும் புலித் தலைவர் உட்பட்ட பல தளபதிகள் இங்கே கொண்டு வரப்பட்டுச் சித்தரவதை செய்யப்பட்டதாகவும் அக்காலத்தில் கூறப்பட்டது.

காட்டுச்சூழலுடன் கூடிய குறித்த பகுதிகளில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் சிங்கள, தமிழ் பணக்கார போதைப்பொருள் பாவனையாளர்களின் சொர்க்கபூமியாக உள்ளது.

முற்றுமுழுதான சிங்கள இராணுவக் கட்டமைப்பு உள்ள பிரதேசத்தில் எதற்காக வனிதா ஆசிரியர் அறை எடுத்துத் தங்கினாள்? தற்கொலை செய்துகொள்ள நினைத்திருந்தாலும் ஏன் அங்கு வந்து தற்கொலை செய்தாள்? தற்கொலை செய்ய முற்பட்டவள் எதற்காக தனது கைகளை அறுத்தாள்? தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன? அவளது பேஸ்புக் பதிவுகள் அவள் இறப்பதற்கு முதல்நாள் வரை சாதாரண பதிவுகளாகவே காணப்பட்டுள்ளன. அவ்வாறாயின் அடுத்த நாளே உடனடியாகத் தற்கொலை செய்ய நினைத்தாளா? கணினியில் டைப் செய்யப்பட்டுப் பிரிண்ட் எடுக்கப்பட்ட கடிதம் எங்கு, எப்போது பிரிண்ட் எடுக்கப்பட்டது? அவளது தொலைபேசிக்குக் கடைசியில் தொடர்பு கொண்டவர்கள் யார் யார்? நீண்ட நேரம் பேசியவர்கள் யார் யார்? அவள் அங்குத் தனியே தங்கியிருந்தாளா? விடுதி உரிமையாளர் கூறுவது எல்லாவற்றையும் உண்மை எனப் பொலிசார் எண்ணுகின்றார்களா? மின்னேரியாப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்க முற்பட்ட போது, விளக்கமான சரியான விவரங்களைத் தர மறுப்பது ஏன்? அங்குச் சரியான முறையில் தமிழ் பேசத் தெரியாத பொலிசார் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஆங்கிலம் தெரிந்த பொலிசாரும் இல்லையா?

வனிதா ரீச்சர் தானாகவே தனது கைகளை அறுத்துத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையாக இருந்தால்,  எமக்கு ஏற்கனவே கிடைத்திருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி பாலியல் தேவைகளுக்காக சிங்கள நண்பர்களை சந்திப்பதற்காக அங்கு சென்று அளவுக்கதிகமான போதைப்பொருளை உட்கொண்டதாலோ அல்லது போதைப்பொருள் சரியான முறையில் அங்கு உடனடியாகக் கிடைக்காத காரணத்தாலோ இவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம். ஏனெனில் போதைப்பொருள் பாவனையாளர்கள் இவ்வாறான அறிகுறிகளுடனேயே தற்கொலை செய்கின்றனர்.

பெண்ணியம், இலக்கியம், கலைகள் என்ற போர்வையில் தனிமனித சுதந்திரத்தை அளவுக்கதிகமாகப் பிரயோகித்துத் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்ட வனிதா ரீச்சர் போல் மேலும் பல விசுப்புலாத்திகள் உலா வருகிறார்கள். இவ்வாறானவர்களைப் பெற்றவர்களும் இவர்களின் உறவுகளும் இவர்களை ஏதாவது ஒரு வழியில் கட்டுப்படுத்தி வைத்திருங்கள்; இல்லாவிடின் இப்படி ஒரு கேவலமான பதிவில் உங்களது உறவும் வெளியே கொண்டுவரப்படலாம்.

நன்றி,

வம்பன்

3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments