Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் கணவனின் தாயாரை சந்தித்து கணவனின் கேவலங்களை கூறமுற்பட்ட இளம் குடும்பப் பெண் கணவனால் குத்திக்...

மட்டு’வில் கணவனின் தாயாரை சந்தித்து கணவனின் கேவலங்களை கூறமுற்பட்ட இளம் குடும்பப் பெண் கணவனால் குத்திக் கொலை!

மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் கணவனின் தாயாரைச் சந்தித்து முறையிடச் சென்ற 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய், கணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (24) மாலை சுமார் 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கும், 31 வயதுடைய கூலித் தொழிலாளியான அவரது கணவனுக்கும் இடையில் நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று மனைவியின் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்று விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தில் மதுபானம் அருந்திவிட்டு கணவன் வீட்டிற்கு வந்ததாகவும், இதையடுத்து இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த மனைவி, கணவனின் தாயாரிடம் முறையிடுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 119 பொலிஸ் அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் கடந்த மாதம் 24ஆம் திகதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதவான் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை சந்திவெளிப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments