மட்டக்களப்பில் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சிறுமியின் சித்தப்பாவான 35 வயதுடைய க.ஜெயானந்தம் என்பவருக்கு இரு குற்றங்களுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (18) விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2019 ஆண்டு மே மாதம் 19 ம் திகதி; 13 வயது சிறுமியை அவரது சித்தப்பாவான 35 வயதுடைய கனகரெத்தினம் ஜெயானந்தம் அல்லது சிவானந்தம் என்பவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக தண்டனைச் சட்டகோவை 354 கீழ் சிறுமியை கவர்ந்து கொண்டு சென்றது மற்றும் தண்டனை சட்டக்கோவை 364 கீழ் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிசார் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.





