மின்னேரியா விடுதி ஒன்றில் சடலமா க மீட்கப்பட்ட வவுனியா ஆசிரியை
வவுனியாவை சேர்ந்த ஆசிரியையான வனிதா சேனாதிராஜா மின்னேரியா பகுதியில் தங்ககம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் வவுனியாவை மையப்படுத்தி பல்வேறு கலை இலக்கியச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவராவார்.
இதே வேளை இவர் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.





