Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு தனியே வந்த 15 வயதான இரு சிறுமிகள்! அவர்களின் ஆடைகளை அகற்றிய...

கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு தனியே வந்த 15 வயதான இரு சிறுமிகள்! அவர்களின் ஆடைகளை அகற்றிய பின் அவர்களுடன் படுக்க முற்பட்ட ஆட்டோச்சாரதி கைது!

யாழில் இரு சிறுமிகளை கடத்தி துஸ் பிரயோகத்திற்கு முயன்ற முச் சக்கர வண்டி சாரதி கைது.

கிளிநொச்சியில் இருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரு சிறுமிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து ஏமாற்றி அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற முச்சக்கர வண்டிச் சாரதி பொலிஸாரிடம் சிக்கினார்.

கிளிநொச்சியில் இருந்து காரைநகர் செல்லும் நோக்கில் இரு சிறுமிகள் பேரூந்தில் வருகை தந்து யாழ்ப்பாணத்தில் இறங்கி காரைநகரிற்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது இரு சிறுமிகள் மீதும் சந்தேகம்கொண்ட சில முச்சக்கர வண்டி சாரதிகள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்க முற்பட்டதனை அவதானித்த ஓர் முச்சக்கர வண்டி சாரதி அதனை சிறுமிகளிடம்கூறி தனது முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.

பேரூந்து நிலையத்திற்கு இருந்து காரைநகர் கூட்டிச் செல்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்ற சாரதி சிறுமிகளை மாதகல் பிரதேசத்தின் ஓர் மறைவான பகுதிக்கு கொண்டு சென்று ஓர் சிறுமியின் ஆடைகளை களைந்து துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்தபோது இரண்டாவது சிறுமி கையில் இருந்த பொருளால் தாக்கி கூக்குரல் இட்டதனால் ஒரு சிறுமியை மட்டும. முச்சக்கர வண்டியில் ஏற்றியவாறு தப்பிச் சென்றுள்ளார். அப்பகுதியில் கூடிய பொதுமக்களிடம் இரண்டாவது சிறுமி விடயத்தை கூறியதும் இளவாளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

பொலிஸார் சென்று ஒரு சிறுமியை மீட்டனர். சிறுது நேரத்தில் இரண்டாவது சிறுமியையும் பொலிஸ் நிலையத்தில் இறக்கிவிட முனைந்த முச்சக்கர வண்டிச் சாரதியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சிறுமிகள் நேற்றைய தினம. மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் சிறுமிகள் பாதிக்கப்படவில்லை எனக் கண்டறியப்பட்டபோதும் முச்சக்கர வண்டி சாரதி துஸ்பிரயோக முயற்சியில் ஈடிபட்டமை  நிரூபிக்கப்பட்டதனால் சாரதி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்..

இதே வேளை குறித்த சிறுமிகளை தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் யார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments