ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் தீவிரவாதப் பிரசார உரைகளை நிகழ்த்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பிரதிவாதிகளுக்கும் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் சற்று நேரத்திற்கு முன்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 5 பிரதிவாதிகளுக்கு தலா 200 ஆண்டுகளும், மேலும் 5 பிரதிவாதிகளுக்கு தலா 220 ஆண்டுகளும், 4 பிரதிவாதிகளுக்கு தலா 240 ஆண்டுகளும், மற்றும் ஒரு பிரதிவாதிக்கு 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





