Home புதினங்களின் சங்கமம் யாழில் மாபிள் வேலை செய்யும் சகோதரர்களான இந்தக் காவாலிகள் தொடர்பாக அவதானமாக இருக்கவும்!!

யாழில் மாபிள் வேலை செய்யும் சகோதரர்களான இந்தக் காவாலிகள் தொடர்பாக அவதானமாக இருக்கவும்!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மாபிள் பதிக்கும் மற்றும் கட்டடங்களுக்கான நில வேலைகள் செய்யும் சகோதரர்களான இருவரு வேலைகளுக்கு செல்லும் இடங்களில் உள்ள பெறுமதியான பொருட்களை களவாடிச் செல்வதாக பலர் தெரிவித்துள்ளார்கள். இருவரும் ஐஸ் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது. இவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு செல்லும் போது கொண்டு செல்லும் கருவிகள் வைக்கும் பைகளில் வீடுகளில் உள்ள பெறுமதியான சிறிய பொருட்களையும் களவெடுத்துச் செல்கின்றார்கள். கைத்தொலைபேசிகள், பவர் வங்கிகள், பணம், வெள்ளி உபகரணங்கள், பித்தனைப் பொருட்கள் உட்பட வீடுகளில் பொருத்தியுள்ள சாதாரண LED பல்ப்புகள் சிறுவர்களின் விலையாட்டுப் பொருட்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை என தெரியவருகின்றது.

இவர்கள் மீது யாழ்ப்பாணம், வவுனியா, கோப்பாய்,கிளிநொச்சி போன்ற பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக தெரியவருகின்றது. இவர்கள் மானிப்பாய் மாட்டொழுங்கை வீதி மற்றும் வவுனியா, கிளிநொச்சி
இடங்களில் மாறி மாறி வசிப்பவர்கள் எனவும் இவர்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கவும எனவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments