Home புதினங்களின் சங்கமம் முதலைகளுக்கே தண்ணி காட்டி தப்பியோடிய கைதி! உயிர்ப் பயத்தில் பிடிக்க முடியாது திணறிய...

முதலைகளுக்கே தண்ணி காட்டி தப்பியோடிய கைதி! உயிர்ப் பயத்தில் பிடிக்க முடியாது திணறிய அகுரெஸ்ஸ பொலிசார்! வீடியோ

அகுரெஸ்ஸ பொலிசாரால் கைது செய்யப்படவிருந்த சந்தேக நபர் ஒருவர், பொலிசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நில்வளா நதியில் பாய்ந்து தப்பிச் சென்ற சம்பவம்சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிசார் சுற்றிவளைத்த போது, திடீரென அருகில் இருந்த நில்வளா நதியை நோக்கி ஓடிய அவர், எவ்வித தயக்கமுமின்றி நதிக்குள் குதித்து நீந்தி தப்பித்துள்ளார்.குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், நில்வளா நதி முதலைகள் அதிகம் நடமாடும் மிகவும் அபாயகரமான நதியாகும். இந்த ஆபத்தை கூட பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து அவர் தப்பியோடியுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.இந்நிலையில், தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளை அகுரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.