Home புதினங்களின் சங்கமம் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஜெயகிருஷ்ணா பலி!

வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஜெயகிருஷ்ணா பலி!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லிலீஸ் லேன் பகுதி, வேதமுல்ல தோட்டம், ரம்பட பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று (15) வேதமுல்ல மதுபானசாலைக்கும் வேதமுல்ல சந்திக்கும் அருகிலுள்ள பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர், கொத்மலை 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை பொலிஸார் இன்று (16) கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞர் எவ்வாறு வெட்டுக் காயங்களுக்கு உள்ளானார் என்பது உள்ளிட்ட மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments