Home புதினங்களின் சங்கமம் வீடு தேடி சென்ற பொலிஸாருக்கு அரிவாளால் வெட்டுவதாக மனைவி மரண அச்சுறுத்தல்!

வீடு தேடி சென்ற பொலிஸாருக்கு அரிவாளால் வெட்டுவதாக மனைவி மரண அச்சுறுத்தல்!

அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை, குறித்த வீட்டின் உரிமையாளரான மனைவி அரிவாளால் (வெட்டியால்) வெட்டிவிடுவதாக மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் , 3,200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதே வீதியில் வசிக்கும் (தம்பதியினர்) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம் ஜயந்தி குறுக்கு வீதியில் வசிக்கும் தம்பதியினர் ஆவர்.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸின் ஊழல் மற்றும் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணசேகரவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சில அதிகாரிகளுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த முற்றுகைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பரிசோதிக்கப்பட வேண்டிய குறித்த வீட்டின் அருகில் பொலிஸ் அதிகாரிகள் சென்றதுடன், வீட்டில் இருந்த சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் உரிமையாளர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்டவேளையில், அவரது மனைவி அரிவாள் ஒன்றை எடுத்து மரண அச்சுறுத்தல் வி
இதனையடுத்து , குற்றவியல் பலப்பிரயோகம் மேற்கொண்டு அரச கடமைக்குத் தடை ஏற்படுத்தியதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments