தென்னிலங்கை போல் யாழ்ப்பாணமும் பாதாள உலகக் கும்பல்களால் சுற்றி வளைக்கப்படுகின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளது. யாழில் உள்ள காவாலிகள் பகிரங்கமாகவே தமது சமூகவலைத்தளங்களில் சீன் போடத் தொடங்கியுள்ளார்கள்.
சினிமா வில்லன்கள் போல் தேர் வடத்தின் கயிற்றின் பருமனில் தங்க நகைகள் அணிவதிலிருந்து பல கோடிரூபா பெறுமதியான வாகனங்கள் வாங்குவதிலிருந்து அனைத்து செயற்பாடுகளையும் தமது சமூகவலைத்தளங்களில் பதிவாக்கி வருகின்றார்கள். எந்தவித உழைப்பும் இல்லாது இவற்றை எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என்று சாதாரண மக்களே சந்தேகிக்கும் போது பொலிசாரோ தற்போதைய அரச பிரமுகர்களோ கண்டும் காணாமல் உள்ளதன் நோக்கம் என்ன என்பது சந்தேகமாக உள்ளது.
அதுவும் மீறு்றர் வட்டிக் காவாலியும் போதைப்பொருள் கடத்தல்காரன் என சந்தேகிக்கப்படுபவனுமான மருதனாமடத்தைச் சேர்ந்த ஒருவனுடன் NPP நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கொஞ்சிக் குலாவி பிற்ந்தநாள் கொண்டாடும் புகைபடங்கள் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காவாலி அண்மையில் 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட சொகுசு வாகனம் ஒன்றை வாங்கியிருந்தான். NPP கட்சியின் யாழ் மாவட்ட எம்.பியும் வைத்தியருமான இன்னொருவர் இவனது சொத்துச் சேர்த்தல் தொடர்பாக சம்மந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவித்து விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குறித்த விசாரணைகளை இளங்குமரன் தடுத்து வைத்துள்ளானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த புதன்கிழமை யாழ், வடமராட்சி, துன்னாலை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் அப்பாவான 33 வயதான காவாலி ஒருவன் இன்னொரு காவாலிக் கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டான். குறித்த கொலைச் சம்பவம் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரு குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என சந்தேகம் எழுந்துள்ளது.
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் தாழ்த்தப்பட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் பல காலமாக முறுகல் நிலை நீடித்து பல தடவைகள் வாள் வெட்டுக்கள் மற்றும் மோதல் சம்பவங்கள் நடைபெற்றள்ளது. இவை போதைப் பொருள் விற்பனைக்காக நடைபெற்றுள்ளதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு நடந்த மோதல்களின் போது தற்போது வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜெனு என்று அழைக்கப்படும் ஜெயசீலன் ஜெனிதன் என்ற காவாலியின் அண்ணன் எதிர்த்தரப்பால் துரத்தி துரத்தி வெட்டப்பட்டு படுகாயமடைந்திருந்தான். அவனது வெட்டப்பட்ட கைவிரலையும் எடுத்துக் கொண்டு சென்ற எதிர்த்தரப்பு காவாலிகள் அந்த விரலை தமது வெற்றியின் சின்னமாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்கள். இவ்வாறு விரலை வெட்டியவர்களை நெல்லியடிப் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி 3 மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையிலேயே சிறையிலிருந்து வெளியே வந்தார்கள்.
இவ்வாறு வெளியே வந்த காவாலிகளில் ஒருவனை தருணம் பார்த்த தற்போது வெட்டிக் கொல்லப்பட்ட காவாலியும் அவனத அண்ணன் மற்றும் ஏனைய சில காவாலிகளும் சேர்ந்து குறித்த காவாலி தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற தருணம் கோவில் சந்தைப் பகுதியில் சுற்றி வளைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தியிருந்தார்கள். குறித்த காவாலி இறந்து விட்டதாக கருதி இவர்கள் சென்ற போதும் அவன் அதிஸ்டவசமாக உயிர் பிழைத்தான்.
குறித்த காவாலியை வெட்டி சாய்த்த ஜெனுவும் அவனது அண்ணனும் நெல்லியடிப் பொலிசாரிடம் சரணடைந்து நீதிமன்றில் ஆயராக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையிலேயே சிறையிலிருந்து வெளி வந்திருந்தார்கள். இவ்வாறு பிணையில் வந்தவனான ஜெனு கடந்த புதன் இரவு வீடொன்றிலிருந்து சாராயம் குடித்த பின்னர் அங்கிருந்து வெளியேறி 1ஆம் கட்டை பகுதியிலுள்ள கடை ஒன்றுக்கு சென்ற போதே எதிர்த்தரப்பு காவாலிகள் இவனை வெட்டிக் கொன்றார்கள். ஜெனுவை அவனது நண்பர்கள் மூலமாக அங்கு தந்திரமாக அழைக்கப்பட்டு எதிர்த்தரப்பு காவாலிகள் வெட்டிக் கொன்றார்களா என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
ஜெனுவை வெட்டியவர்களில் இருவர் 17 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். இவர்களுக்கு ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்கள் போதைப்பொருள் முகவர்களின் அடியாட்களாக உள்ளதாக சந்தேகம் நிலவுகின்றது. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவு பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவற்துறையினர், மூவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த புகைப்படத்தில் கொலை செய்யப்பட்ட வாள் வெட்டுக்குழு காவாலியும் போதைப்பொருள் முகவருமான ஜெனுவுக்கு அருகில் நிற்பவன் தொன்டமனாறைச் சேர்ந்த செந்துரான் என்பவன். இவன் தன்னை சமூகவலைத்தள பிரபலமாக காட்டிக் கொண்டு காவாலிகளின் கூட்டாளியாக உள்ளான். இவன் தனது வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்து இவன் இறந்தவுடன் அதனை நீக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






