Home புதினங்களின் சங்கமம் யாழ்.வடமராட்சியில் எட்டு ஆண்டுகளாக காணாமல் போன மகனைத் தேடும் முதியவர்!

யாழ்.வடமராட்சியில் எட்டு ஆண்டுகளாக காணாமல் போன மகனைத் தேடும் முதியவர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிராமத்தை பிறப்பிடமாகவும், குடத்தனை கிழக்கு மாளிகைத் திடலை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த- 2018 ஆம் ஆண்டு பங்குனி மாதத்திலிருந்து காணாமல் போயுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதிக்கு வேலைக்கு செல்வதாகத் தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என முதியவரான தந்தை செல்வராசா தெரிவித்தார்.

குறித்த நபர் காணாமல் போன தினத்திலிருந்து ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியிருக்கிறது. பலர் அதில் பேசியிருக்கிறார்கள். ஆனால், காணாமால் போன குறித்த நபர் பேசவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவரான செல்வராசா அருந்தவச் செல்வன் தொடர்பில் ஏதாவது தகவல் யாராவது அறிந்தால் 0774323487 எனும் தொலைபேசி இலக்கத்துக்குத் தெரிவிக்குமாறும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments