பிரித்தானியாவின் லண்டனில் வன்முறை சுபாவம் கொண்டவர், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
46 வயதான பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். மேற்கு லண்டனில் உள்ள சவுத்போல் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி அளவில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து இவர் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவரைக் கண்டால் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் ஒரு முறையும்,
2023 ஆம் ஆண்டில் இரண்டு முறையும்,
2024 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு முறையும் இவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த ஆபத்தான நபர் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Home புதினங்களின் சங்கமம் லண்டனில் காவலில் இருந்த தமிழ் குடும்பஸ்தரான காவாலி தப்பி ஓட்டம்! பெண்கள், சிறுமிகள் அவதானமாக இருக்குமாறு...





