Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு தேவிபுரத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!

முல்லைத்தீவு தேவிபுரத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!

தேவிபுரம் ‘ஆ’ பகுதி, குள வயல் பின் வீதியில் மக்கள் வசிக்காத காணி ஒன்றில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று ஊர் மக்களால் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் அச்சமும் கவலையும் அடைந்த நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் எவ்வாறு அங்கு வந்தது? உயிரிழப்புக்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments