Home புதினங்களின் சங்கமம் சந்திவெளியில் நடந்த விபத்தில் இளைஞன் பலி!

சந்திவெளியில் நடந்த விபத்தில் இளைஞன் பலி!

இன்று (9) அதிகாலை மட்டக்களப்பு சந்திவெளியில் நடந்த விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருகையில்….
மட்டு கிரான்குளத்தைச் சேர்ந்த இளைஞன் பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்துவரும் நிலையில் இரவுப் பணியினை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை கிரான்குளம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் சந்திவெளி பகுதியால் பயணிக்கும் போது பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கிரான்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments