Home புதினங்களின் சங்கமம் யாழில் ஒருவன் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை!

யாழில் ஒருவன் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில் ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்
இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகாளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments