Home புதினங்களின் சங்கமம் கனடாவை அதகளப்படுத்திய தமிழ் காவாலி!! கனேடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்!! வீடியோ

கனடாவை அதகளப்படுத்திய தமிழ் காவாலி!! கனேடிய பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம்!! வீடியோ

கனடா ஒன்டாரியோவின் ஸ்கார்புரோ தொகுதி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா ஜாஹித்தின் வீட்டின் முன்பாக பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய ரோஷ்வின் கிராஃப்டன் (Roshvin Crofton) என்ற இளைஞரே டொராண்டோ பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி அதிகாலை வேளையில் இனம்தெரியாத நபர் ஒருவர், சல்மா ஜாஹித்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இரண்டு வாகனங்கள் முழுமையாக தீப்பற்றி எரிந்ததுடன், மூன்றாவது வாகனமும் சேதமடைந்தது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மீது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையது என சந்தேகிக்கப்படும் 2025 ஆம் ஆண்டுக்குரிய ஹூண்டாய் சொனாட்டா (Hyundai Sonata) ரக கார் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இதில் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா ஜாஹித், பொலிஸாரின் இந்த கைது நடவடிக்கையை வரவேற்பதாகவும், ஆனால் இதற்கான காரணம் பின்னணி அல்லது காரணம் என்னவென்று இன்னமும் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் நிலத்தில் இடம்பெற்ற இந்த தீவைப்பு சம்பவத்திற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உட்பட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments