Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் தாத்தா செலுத்திய வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை சில்லில் நசியுண்டு பலி!

கிளிநொச்சியில் தாத்தா செலுத்திய வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை சில்லில் நசியுண்டு பலி!

7
0

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம் வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில், வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று(05) காலை இடம்பெற்றுள்ளது
வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்தியபோது, குழந்தை எதிர்பாராத விதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்றதாகவும், இதன்போது வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவத்தையடுத்து குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments