Home புதினங்களின் சங்கமம் இந்திய மீனவர்களின் அட்டகாசம்: வலைகளை அறுத்துச் சென்றனர்!

இந்திய மீனவர்களின் அட்டகாசம்: வலைகளை அறுத்துச் சென்றனர்!

2
0

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில வலைகளும் திருடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments