புதினங்களின் சங்கமம்

கற்பிட்டியில் 8 மாத கர்ப்பிணிப் பெண் கணவனால் வெட்டிக் கொலை!!

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான கர்ப்பிணித் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், விரைந்து செயற்பட்ட பொலிஸார் 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.

அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x