வவுனியாவில் அதி வேகமாக வந்த டிப்பர் சோளம் விற்கும் வீதியோர கடை மீது மோதியது! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்! வீடியோ
வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக நேற்று முன்தினம் (02.09.2026) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மன்னாரிலிருந்து வந்த டிப்பர் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் சோளம் விற்றுக் கொண்டிருந்தவர் மற்றும் அவரிடம் சோளம் வாங்கிக் கொண்டிருந்தவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சோளம் வாங்கிக் கொண்டிருந்த சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த ரகீம் மஜீத் (வயது 31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சோளம் விற்ற மற்றொருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



