வகுப்பறையில் தொலைபேசி பாவித்ததை வீட்டில் போட்டுக்கொடுத்த அதிபரை வீடுபுகுந்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவர்கள்!
இந்தியா தெலுங்கானாவில் உள்ள பாடசாலையொன்றின் அதிபருக்கு நடத்த பதபதைக்கும் சம்பவம்
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோரிடம் புகார் செய்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர், பள்ளி முதல்வரின் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் 27 முறை கு த்தி கொ லை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ.2.5 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு கோவாவுக்கு சுற்றுலா சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
