சைவபரிபாலனசபையில் 43 லட்சத்தை சுருட்டிய செயலாளர் செல்வவடிவேல்!! மேடைப்பேச்சாளர்கள், கதாப்பிரசங்கம் செய்பவர்கள் என்ற போர்வையில் நடப்பது என்ன?
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், சிறுவர்கள் நடாத்திய வில்லுப்பாட்டு ஒன்றின் சிறு பகுதி எமக்குக் கிடைத்திருந்தது. அதன் நதி மூலத்தை ஆராய முற்பட்ட போது, குறித்த வில்லுப்பாட்டு புகழ்பெற்ற ஒரு கோவிலில், அதுவும் ஆன்மீகத் தலைவர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் ஒரு கோவிலில் நடைபெற்றதை அறிந்து, பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினோம்.
இவற்றை ஆராய முற்பட்டுக் கொண்டிருந்த போது, மேலும் பல தகவல்கள் எமக்குக் கிடைத்திருந்தன. யாழ்ப்பாணத்தில் செயற்படும் பல இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்வேறு பட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது எமக்குத் தெரியவந்துள்ளது.
சைவ பரிபாலன சபையை நிர்வகித்துக் கொண்டிருந்த போது, அதன் செயலாளராக இருந்து 43 லட்சத்திற்கும் மேல் சுருட்டியுள்ளார் இரா. செல்வவடிவேல். இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். யாழில் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒ.எல் (O/L) விஞ்ஞான பாடம் கற்பித்தது முதல், சைவ சமய மேடைப் பேச்சுக்கள், கம்பன் கழக உறுப்பினராக இருந்து கொண்டு பட்டிமன்றப் பேச்சுக்களில் கலந்து கொண்டதிலிருந்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட செல்வவடிவேல், சைவ பரிபாலன சபை பணத்தைக் கையாடல் செய்து, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகத்திடம் மாட்டுப்பட்டு, தற்போது அந்தப் பணத்தைப் பகுதி பகுதியாகத் திருப்பிக் கொடுத்துக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1995-ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து இயக்கத்தால் அடித்து விரட்டப்பட்ட கம்பன் கழகத்தில் ஜெயராஜ் உட்பட பல மேடைப் பேச்சாளர்கள் இரட்டை அர்த்தத்தில் மேடைகளில் தமது பேச்சைத் தொடர்ந்து வந்ததால், பல தடவைகள் இயக்கத்தால் எச்சரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

