அதி வேகத்தில் பறந்த 18 வயது இளைஞன் பலி!! புதுக்குடியிருப்பில் சம்பவம்!!
மோட்டார் சைக்கிள் பனை மரத்தில் மோதியதில் 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் 46ம் கட்டை பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த இளைஞனும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே பின்னாலிருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்தவர் 18 வயதுடைய இளைஞன் முல்லைதீவு சிவநகர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதிக வேகமே இந்த விபத்து இடம்பெற காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


