இந்தப் புகைப்படங்கள் அரச புலனாய்வுத்துறையால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வலிகிழக்கு பிரதேசசபைத் தலைவர் அரச வாகனத்தில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றுள்ளதாக புலனாய்வாளர்கள் செய்தித்தளங்களுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார்கள்.
தற்போது ஊடகவியலாளர்களை விட புலனாய்வாளர்கள் அதிக செய்திகளை ஊடகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
உணர்வு மிக்க செயற்பாடுகளை செய்யும் போது அடுத்தவனின் பல்லுக்கும் வாய்க்குள்ளும் அகப்படுவது போல் இவ்வாறான அற்ப சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டா செய்யப் போகின்றீர்கள்? யோசித்து முடிவெடுங்கள்…
நீங்கள் அரச வாகனத்தில் சென்று வந்துவிடுவீர்கள். இதனால் விசாரணைகளை எதிர்நோக்கப் போவது அப்பாவி சாரதியும், செயலாளருமே என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்….






