யாழில் உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்! வாக்குமூலத்தில் கூறுவது என்ன?
யாழ் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த தீ மூட்டித் தற்கொலை செய்த இரட்டைச் சகோதரிகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களது உறவுகள் பலர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் குறித்த யுவதிகளிடம் வாக்குமூலம் பெற்ற தரபை்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அந்த யுவதிகளின் வாக்குமூலத்தையும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.
போதைப் பொருள் பாவித்து போதை தலைக்கேறிய நிலையிலேயே இருவரும் தமக்குத் தாமே தீ மூட்டி தற்கொலை செய் ய முயற்சித்துள்ளார்கள்.
இதே வேளை குறித்த யுவதிகளில் ஒருவர் மரணப்படுக்கையில் தண்ணீர் கேட்கும் போது அதனைக் கொடுக்காது வாக்குமூலம் பெறுவதிலேயே குறியாய் இருப்பதையும் அறிய முடிகின்றது. இரு யுவதிகளும் ரிக்டொக் மற்றும் பேஸ்புக் வலைத்தளங்களுக்கு அடிமையாகி போதைப்பொருள் பாவித்த பின்னர் றீல்ஸ்கள் வெளியிட்டுள்ளதாகவும் கோவில் திருவிழாக்கள் மற்றும் துாக்குகாவடிகள் எடுக்கும் போது அவற்றிற்கு முன் போதைப்பொருள் பாவித்த பின் குத்தாட்டம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தள்ளார்கள். யுவதிகளின் அப்பா இரண்டு திருமணம் முடித்துள்ளார் எனவும் குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூக கட்டமைப்பில் உள்ளவர்கள் என்பதுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் அதிக அளவில் பாவனையில் உள்ளதாகவும் குறித்த பகுதிக்கு அண்மையில் வாழ்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

