புதினங்களின் சங்கமம்

அவசர சிகிச்சைப் பிரிவில் அப்பா!! பார்க்க சென்ற மகனை மறித்த வைத்தியசாலை ஊழியர்கள்!! கோபத்தில் முரண்பாடு!! துரத்த வந்த பொலிஸ் மீது மகன் தாக்குதல்!! நடந்தது என்ன?

ஹொரணை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி படுகாயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், வைத்தியசாலை ஊழியர்களை வசைபாடி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவரை வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்திய போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் சந்தேகநபர் அங்கேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபரை வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வைத்தியசாலை பொலிஸ் சார்ஜன்ட் தலையிட்டுள்ளார். இதன்போது சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட்டின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவத்தின்போது வைத்தியசாலையின் ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் சந்தேகநபரால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு முன்னதாக சந்தேகநபருக்கும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபர் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். எனினும், அவர் தப்பிச் சென்ற காரின் இலக்கத்தை வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளதால், சந்தேகநபரை அடையாளம் காணவும் கைது செய்யவும் விசாரணைகளுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபரின் தந்தை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள், ஹொரணை பதில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஹொரணை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x