யாழ்.சித்தன்கேணியில் காவாலிகள் அட்டகாசம்! மாணவர்களின் கனவு நாசம்! Video
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவற்குட்பட்ட சித்தன்கேணியில் சந்தியிலிருந்து பண்டத்தரிப்பு செல்லும் வீதியில் வீதியில் இரு பக்கங்களிலும் பாரிய அளவிலான ஒலிபெருக்கிப் பெட்டிகளை அடுக்கி அப்பகுதியில் வசிக்கும் காவாலிகள் மதுபோதையில் மனிதனால் சகிக்க முடியாத ஒலிகளை இரவு முழுவதும் எழுப்பிப்கொண்டிருப்பதால் அயலில் வசிக்கும் இதய நோயாளர்களும் உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நள்ளிரிவிற்கு அண்மித்த நேரத்திலும் காவாலிகளின் செயற்பாடு தொடர்வதால் வீதியில் போக்குவரத்து செய்யமுடியாமலும் மக்கள் திண்டாடிவருகின்றனர்.அதிர்வினால் வீதியில் செல்வோரது இதயத்தின் ஆரோக்கியம் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை காலை(25) அப்பகுதியில் ஆடு அறுத்து நடைபெறவுள்ள வேள்விக்காகவே காவாலிகள் மதுபோதையில் இவ்வாறு செயற்படுவதாக அப்பகுதி மக்களால் எமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை சிரிப்பு பொலிசாரும்.
அப்பகுதி் நிர்வாகத்திற்கு பொறுப்பான அரச அதிகாரிகளும் என்ன புடுங்குகறார்கள் என மக்களினால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது

